தினமும் இரண்டு கிராம்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!
உணவின் ஒரு பகுதியாக மிதமான அளவு கிராம்பை சாப்பிட்டு வர நம் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. எனினும் தினமும் கிராம்பை அதிக அளவில் சாப்பிடுவதால் ஒரு சில பக்க விளைவுகள் ஏற்படலாம்.
கிராம்பில் நிறைந்திருக்கும் ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ், தீங்கு விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.
வாயில் இருக்கும் பாக்டீரியாக்களை அழித்து, பல்சொத்தை மற்றும் ஈறு தொடர்பான நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
இது செரிமான நொதிகளின் உற்பத்தியை தூண்டி, இரைப்பை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கிராம்பு ரத்த குளுக்கோஸ் அளவுகளை சீராக்கி இன்சுலின் உணர்திறனை ஊக்குவிக்கிறது.
இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது.
உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.