பச்சை இலை, காய்கறிகளின் நன்மைகள்..!
பச்சை பட்டாணி : தாவர அடிப்படையிலான புரதம், நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே சத்துக்கள் பச்சை பட்டாணியில் நிறைந்துள்ளன.பச்சை பட்டாணி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
சுரைக்காய்: வைட்டமின் ஏ, சி மற்றும் பொட்டாசியம் நிறைந்த காய்கறியாகும். இது கண் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது, செரிமானத்திற்கு உதவுகிறது.
கீரைகள்: இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி மற்றும் ஃபோலேட் போன்ற சத்துகள் கீரையில் நிறைந்துள்ளன. இது சரும மேம்பாட்டிற்கும் பார்வை திறனை அதிகரிக்கவும் உதவுகிறது.
வெள்ளரிக்காய்: வைட்டமின் கே மற்றும் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. வெள்ளரிக்காய் உடலில் நீரேற்றத்தை ஊக்குவிக்கின்றது. மேலும் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகின்றது.
கிளைக்கோசு: நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற சத்துக்கள் கிளைக்கோசில் நிறைந்துள்ளன . கிளைக்கோசு இதய ஆரோக்கியம் மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது.
புரோக்கோலி: நார்ச்சத்து, வைட்டமின் சி, கே மற்றும் ஃபோலேட் ஆகிய சத்துக்கள் புரோக்கோலியில் நிறைந்துள்ளன.இதில் சல்போராபேன் என்ற கலவை உள்ளது. இது புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது.