அன்றாட உணவில் ராகியை சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்..!
ராகியில் நார்ச்சத்து மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்டுகள் உள்ளன. இவை புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்க உதவுகின்றன.
செரிமான பிரச்சினையை தடுத்து, செரிமான மண்டலம் சிறப்பாக செயல்பட காரணமாகிறது.
சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கும் தன்மைக்கொண்டது.
ராகியில் அதிக கால்சியம் சத்து இருப்பதால் அவை எலும்புகளின் வளர்ச்சிக்கும், வலிமைக்கும் முக்கிய பங்காற்றுகிறது.
ராகியில் உள்ள லைசின் சருமத்தில் அரிப்புகள், சுருக்கங்கள் போன்றவை ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
ராகியில் ட்ரிப்டோபேன் என்னும் அமினோ அமிலம் இருப்பதால் இவை பசியுணர்வைக் கட்டுப்படுத்தி, எடை இழப்புக்கு உதவி புரிகின்றன.