பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழத்தின் நன்மைகள்!

நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய தன்மை மற்றும் உள்ள வைட்டமின் சி மற்றும் ஏ தாராளமாக உள்ளது.
மாம்பழம் சாப்பிடுவது செரிமானத்தை அதிகரிக்க செய்யும். இதய நோய் அபாயத்தை குறைக்கும்.
பழத்தில் இருக்கும் காரோட்டீனாய்டு சத்து உடலில் வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்க செய்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
பழத்தை சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனையை போக்குகிறது. எனினும் அதிக அளவு சாப்பிட்டால் அதுவே வயிற்று போக்கையும் உண்டாக்கிவிடும்.
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மாம்பழம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அந்த நாள் முழுவதும் பசி உணர்வை தூண்டிவிட்டுவிடும்.
மாம்பழத்தில் நார்ச்சத்தும், சர்க்கரையும் அதிகம் இருக்கிறது. அதனை அதிகம் உட்கொள்வது வயிற்று எரிச்சல் பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும்.
ரத்தத்தில் சர்க்கரை அளவு உயராமல் இருக்க மாம்பழத்துடன், பாதாம் பருப்பையும் சேர்த்து உட்கொள்ளலாம்.
எனவே அளவோடு சாப்பிட்டால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும், இரத்தத்தையும் சுத்தம் செய்து, நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.