கட்டில் மெத்தையே ஓரங்கட்டுங்க..தரையில் படுங்க.!!

கட்டில் மெத்தையே ஓரங்கட்டுங்க..தரையில் படுங்க.!!

Published on
பொதுவாக முதுகின் கீழ் பகுதி வலியால் பாதிக்கப்பட்டவர்கள் தரையில் படுத்து தூங்கும் போது, இந்த வலிக்கு ஒரு சிறந்த நிவாரணம் கிடைக்கிறது.
நீண்ட நேரம் படுக்கும்போது முதுகு தண்டு வலி, தலையணை சரியாக இல்லாமல், கழுத்து வலி போன்றவை ஏற்படுகின்றன. தரையில் படுத்து உறங்குவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது.
முதுகை தரையில் வைத்து படுப்பதால் உங்கள் இடுப்புகளும், தோள்களும் வலி இல்லாமல் இருக்கும். இதனால் மற்ற பகுதிகளில் ஏற்படும் வலிகளும் நீங்கும்.
தரையில் உறங்கும்போது எலும்புகள் மற்றும் மூட்டுகளில் எந்த ஒரு தவறான சீர்கேடும் ஏற்படாது. செயற்கையான கோணங்களால் தசையில் ஏற்படும் அழுத்தமும், எரிச்சலும் தவிர்க்கப்படும்.
இந்த உறக்கம் உடலில் ஏற்கனவே தவறாக சீரமைக்கப்பட்ட எலும்பு மற்றும் மூட்டுகளை ரிப்பேர் செய்ய உதவுகிறது.
மூளையுடன் நேராக இணைக்கப்பட்ட மத்திய நரம்பு மண்டலத்தை தாங்குவது உங்கள் முதுகு தண்டாகும். உடலில் இது ஒரு முக்கியமான பகுதியாகும். ஒரு நல்ல தோற்றம் உங்கள் முதுகு தண்டுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது.
நெரித்த நரம்புகள் மற்றும் மோசமான முதுகெலும்புகள் ஆகியவற்றின் சாத்தியக்கூறை உங்கள் நல்ல தோற்றம் குறைக்கின்றன.
தரையில் படுத்து உறங்குவதால் உடலில் எந்த ஒரு பாகத்திலும் தவறான சீரமைப்பு ஏற்பட வாய்ப்புகள் மிகவும் குறைவு. தலையணை இன்றி உறங்குவதால் மூச்சு திணறல் ஏற்படும் வாய்ப்பு குறைவு.
இந்த நல்ல நிலையில் படுக்கும்போது, உடல், மூளைக்கு தான் மிகவும் சௌகரியமாக உணர்வதாகவும், மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சிக்னல் அனுப்புகிறது. இதனால் நேர்மறை எண்ணங்கள் தூண்டப்பட்டு மனமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com