காலணி அணியாமல் வெறும் கால்களில் தரையில் நடப்பதால் ஏற்படும் நன்மைகள்..!
வெறும் கால்களில் நடக்கும் போது மூட்டு வலி பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.
காலணிகளைப் போட்டு நடப்பதை விட வெறும் கால்களில் மணலில் நடப்பதற்கு கால் தசைகளின் கூடுதல் முயற்சி தேவைப்படுகிறது. இவ்வாறு நடக்கும் போது கணுக்கால்களும் பாதங்களும் அதிக பலம் பெறுகின்றன.
வெறும் கால்களில் மணலில் நடக்கும் போது, அதிக அளவு கலோரிக்கள் எரிகின்றன. இதனால் கூடுதல் திறனுடன் உடல் பருமனைக் குறைக்க முடியும்.
வெறும் கால்களில் நடப்பதன் மூலம், பாதங்களில் உள்ள இறந்த சரும அணுக்களை நீக்க உதவுகிறது.
வெறும் கால்களில் நடப்பதன் மூலம் பாதங்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் மற்றும் பாதங்களில் உள்ள சொரசொரப்பைப் போக்க உதவும்.
வெறும் கால்களில் மணலில் நடப்பதால், பாதங்களில் உள்ள அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன. இதனால் உடலில் உள்ள சுரப்புகள் மற்றும் உறுப்புகளின் செயல்பாடுகள் ஊக்குவிக்கப்படுகின்றன.
நாம் நடக்கும், ஓடும் முறையில் இருக்கும் தவறு, வெறும் கால்களில் மணலில் நடக்கும் போது சரி செய்யப்படுகிறது. இதன் காரணமாக இடுப்புத் தசைகள் பலம் பெறுகின்றன.
மணலில் வெறும் கால்களில் நடக்கும் போது மன அழுத்தம் நீங்கி மனம் அமைதி பெறுகிறது.
வெறும் கால்களில் நடக்கும் போது பூமியோடு நமக்குள்ள தொடர்பு பலமாகிறது. அது நம் உடல், மன நலத்தில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்துகிறது.