பின்னி எடுக்கும் பிரண்டையின் நன்மைகள்..!

பிரண்டை எனும் தாவரம், வேலி ஓரங்களில் படர்ந்து வளரும் ஒரு கொடி வகையாகும். பழங்காலத்தில் இருந்து பிரண்டை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதம், வைட்டமின் சி, அமிரோன், அமைரின், சிட்டோசிரால், கரோட்டின், குவாட்ராங்குலாரின்-ஏ, குவர்சிடின் போன்ற சத்துக்கள் பிரண்டையில் உள்ளன.
பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் இடுப்பு வலி, வயிற்று வலி நீங்குவதற்கு பிரண்டை சிறந்த மருந்தாகும்.
பசியைத் தூண்டுவதில் பிரண்டை சிறந்து விளங்குகிறது.
செரிமான சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டது.
ரத்தக் குழாய்களில் ஏற்படும் கொழுப்பைக் கரைத்து, ரத்த ஓட்டத்தை சீராக செயல்பட வைக்கிறது.
எலும்புகளை ஒட்ட வைக்கும் சக்தி, பிரண்டையில் நிறைந்துள்ளது.
வீக்கம், சுளுக்கு, பிடிப்பு போன்றவற்றுக்கு பிரண்டை சிறந்த மருந்தாகும்.
பிரண்டை இலையை துவையல் செய்து சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோய், குடல் புண், மூல நோய் போன்றவை குணமாகும்.
பிரண்டை உடல் சுறுசுறுப்பை அதிகரித்து ஞாபக சக்தியை பெருகச் செய்கிறது.