புகைபிடிப்பதை நிறுத்துவதற்கான சிறந்த வழிமுறைகள்..!
f
புகைப்பதை நிறுத்த ஒரு தேதியை முடிவுசெய்தபின் அதைப் பின்பற்ற எந்த மனத்தடை வந்தாலும் அதை உடைத்தெறிய வேண்டும்.
f
புகை நிறைந்த சூழ்நிலையையும் புகைபிடிக்கும் நண்பர்களையும் அடியோடு தவிர்க்க வேண்டும்.
f
புகை பிடிக்கும் உணர்வு தோன்றும்போது உங்களைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.
f
புகைப்பதற்கு மாற்றாக ஒரு நல்ல பழக்கத்துக்கு அடிமையாக முயற்சி செய்யுங்கள். வாசிப்பது, பாடுவது, வரைவது என உங்களுக்குப் பிடித்தமான நல்ல விஷயத்தில் கவனத்தை திசை திருப்புங்கள்.
f
புகை பிடிக்கும் எண்ணம் தோன்றும்போதெல்லாம் மூச்சுப் பயிற்சி செய்வதன் மூலம், நுரையீரலுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கமுடியும்.
f
புகைப்பதை நிறுத்தியபின் அதை நினைவூட்டும் எதுவொன்றையும் உங்கள் வீட்டிலோ அலுவலகத்திலோ வைப்பதை தவிர்க்க வேண்டும்.