புளுபெர்ரி ஆக்ஸிஜனேற்றத்தின் இயற்கையான முதன்மை ஆதாரங்களில் ஒன்றாகும். இவை ப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாத்து புற்றுநோய் அபாயத்திலிருந்து பாதுகாக்கிறது.
புளுபெர்ரியில் இருக்கும் பிளாவனாய்டுகள் எல்.டி.எல் (கெட்ட) கொழுப்பின் அளவைக் குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
புளுபெர்ரியில் உள்ள சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளான அந்தோசயினின், ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். இந்த கலவை ரத்த நாளங்களை தளர்த்தவும் மற்றும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
புளுபெர்ரியில் நிறைந்திருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
புளுபெர்ரியில் உள்ள நார்ச்சத்து செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது வழக்கமான குடல் இயக்கத்திற்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கலை தடுக்கிறது.
புளுபெர்ரியில் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளது. இது எடை மேலாண்மைக்கு உதவி புரியும்.
புளுபெர்ரி சாப்பிடுவதால் மூளைக்கு சீரான ரத்த ஓட்டம் கிடைக்கும். இதனால் மூளை செல்களின் வளர்ச்சி மேம்படுகிறது.
புளுபெர்ரி, வயது தொடர்பான மாகுலர் டிஜெனரேஷன் (AMD) அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன. இதனால் கண் ஆரோக்கியம் மேம்படுத்துகிறது.
இதில் வைட்டமின் சி மற்றும் ஈ உள்ளது. இது தோல் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துவதற்கும், சுருக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைப்பதற்கும் உதவுகிறது.
புளுபெர்ரியில் உள்ள வைட்டமின் பி6 மற்றும் போலேட் ஆகியவை ஹோமோசைஸ்டீன் உருவாவதைத் தடுக்கின்றன. இதனால் இதய நோய் அபாயம் குறைகிறது.