சர்க்கரை நோயாளிகள் நெய் பலகாரங்களை சாப்பிடலாமா?

நெய்யில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இதனால் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது.
நெய் லாக்டோஸ் இல்லாதது, ஜீரணிக்க எளிதானது. நெய் சேர்ப்பது, உணவின் கிளைசீமிக் குறியீட்டைக் குறைக்கிறது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.
இது சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.
சர்க்கரை நோயாளிகள் நெய் பயன்பாட்டில் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். பருப்பு அல்லது அரிசி உணவில் ஒரு ஸ்பூனுக்கு மேல் நெய் சேர்க்கக் கூடாது.
கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள எந்த உணவிலும் ஒரு டீஸ்பூன் நெய்யை மட்டும் சேர்க்கலாம். சுத்தமான நெய்யை மட்டும் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.
கர்ப்பிணிகள் அதிக எடை இருந்தால் நெய்யை குறைவாக சாப்பிட வேண்டும்.
அஜீரணம் மற்றும் வயிற்று பிரச்சினையால் அவதிப்படுபவர்களும் நெய் சாப்பிட வேண்டாம்.
சிரோசிஸ், ஹெபடோமேகலி, ஹெபடைடிஸ் போன்ற சிறுநீரகம், இதயம் அல்லது கல்லீரல் நோய்கள் இருப்பவர்கள் நெய்யை தவிர்க்க வேண்டும்.