வண்டிய விடுடா பழக்கடைக்கு... நட்சத்திர பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா..?
இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இது செரிமான சக்தியை மேம்படுத்துகிறது.
கொலஸ்ட்ரால் பிரச்சினையை விரட்டியடிக்கும் தன்மைக்கொண்டது.
இது ரத்தத்தில் செல்லக் கூடிய கெட்ட கொழுப்பு துகள்களை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை பலப்படுத்துகிறது.
மெக்னீசியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ள நட்சத்திர பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.
உடல் எடையை கட்டுக்கோப்பாக வைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.