டீயுடன் முட்டை பப்ஸ் சாப்பிடலாமா?

டீ பருகும்போது அதனுடன் சேர்த்து நொறுக்குத்தீனியாக சிலர் முட்டை பப்ஸ் சாப்பிடுவதுண்டு.
ஆனால் டீயுடன் முட்டையை சேர்த்து உட்கொள்வது ஆரோக்கிய ரீதியாக ஏற்புடையதல்ல.
இரண்டையும் அடிக்கடி ஒன்றாக சாப்பிடுவது ஊட்டச்சத்து உறிஞ்சுதலை தடுக்கக்கூடும்.
டீயில் உள்ள டானின், பாலிபினால்கள் எனப்படும் சேர்மங்கள் முட்டையில் காணப்படும் புரதம், இரும்பு, கால்சியத்துடன் பிணையும்போது உடலால் அவற்றில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை திறம்பட உறிஞ்ச முடியாது.
சிலருக்கு இந்த கலவை வாயு தொல்லை, அஜீணரத்துக்கு வழிவகுக்கும். முட்டை, டீ இரண்டும் வயிற்று அமிலத்தை தூண்டக்கூடியவை என்பதால் இந்த பிரச்சினை ஏற்படக்கூடும்.
சிலருக்கு மலச்சிக்கலையும் உண்டு பண்ணும். இதுபோன்ற உடல்நல பிரச்சினைகளை தவிர்க்க டீயுடன் முட்டையை ஒன்றாக சாப்பிடுவதை தவிர்ப்பதே நல்லது.
இரண்டையும் சாப்பிட விரும்பும் பட்சத்தில் முட்டை அல்லது முட்டை பப்ஸ் சாப்பிட்டு விட்டு அரை மணி நேரம் கழித்து டீ பருகலாம்.
Explore