குளுகுளு ப்ரூட் லஸ்ஸி வீட்டிலேயே செய்யலாமா?
தேவையான பொருட்கள் : ஆரஞ்சு, வாழைப்பழம், ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, உலர் திராட்சை, சர்க்கரை, புளிக்காத தயிர், முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவை.
செய்முறை : முதலில் வாழைப்பழம், ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரியை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
முந்திரி, பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி வைக்கவும்.
ஆரஞ்சு பழத்தை விதை நீக்கி வைத்து கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் எல்லா பழங்களையும் போட்டு அதனுடன் உலர் திராட்சையையும் கலந்து வைக்கவும்.
பின்னர் அதில் தயிர் சேர்த்து கலந்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும்.
பிறகு கிளாஸில் ஊற்றி அதன் மேலே முந்திரி, பாதாம், பிஸ்தா தூவி பரிமாறவும். இப்போது சூப்பரான ப்ரூட் லஸ்ஸி ரெடி.
வேண்டுமானால் ஐஸ் கட்டி சேர்த்துப் பருகலாம். இது உடல் சூட்டையும், நீர்க்கடுப்பையும் உடனே தணிக்கும்.