குழந்தைகளுக்கு அடிக்கடி சிப்ஸ் வாங்கி கொடுக்கலாமா?வாங்க பாக்கலாம்..!
சிப்ஸ் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் எண்ணெய் ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்துவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கும் தன்மைக்கொண்டது.
அதிகமாக சிப்ஸ் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயம் மற்றும் பிற்காலத்தில் மலட்டுத்தன்மை பிரச்சினை உண்டாகலாம்.
இவை கொலஸ்டிராலை அதிகரித்து பிற்காலத்தில் இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படக்கூடும்.
உடலில் ஆரோக்கியமற்ற கொழுப்பை ஏற்படுத்தி உடல் பருமன் பிரச்சினை உண்டாகும்.
சிப்ஸ் கெட்டுப்போகாமல் இருக்க அதில் அதிகம் உப்பு சேர்க்கப்படுகிறது.இவை உயர் ரத்த அழுத்தம் ஏற்பட காரணமாக அமைகிறது.