freepik
freepik

இந்த வழிமுறைகளை பின்பற்றினால் உடல் சூட்டை குறைக்கலாமா?

Published on
காபி மற்றும் மது அருந்துவதை குறைப்பதன் மூலம் உடலில் உள்ள வெப்பத்தை குறைத்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
இறைச்சிகள் சாப்பிடுவதை குறைப்பதன் மூலம் உடலில் உள்ள வெப்பத்தை குறைக்கலாம்.
உடல் வெப்பநிலையை பராமரிக்க குறைந்த அளவு சோடியம் சேர்த்த உணவை பின்பற்ற வேண்டும்.
எண்ணெயில் வறுத்த உணவுகளை அதிகமாக உட்கொள்வது உடலில் அதிக வெப்பத்தைத் தூண்டுகிறது, வறுத்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
காரமான உணவுகள் உடலில் வெப்பத்தை ஏற்படுத்த கூடியது. எனவே காரமான உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
சில வகை துணிகள், வெப்பம் மிக எளிதாக உடலுக்குள் செல்ல இடம் அளிக்கக்கூடியது. குறிப்பாக, அக்ரிலிக் மற்றும் நைலான் போன்ற துணிகளைத் தவிர்க்கவும்.
அதிக அளவு தண்ணீரை அருந்துவதன் மூலம் உடலை நீரேற்றமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்க முடியும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com