படுத்தா தூக்கம் வரலையா? இதை ட்ரை பண்ணி பாருங்க..!
ஊட்டச்சத்து இல்லாத துரித உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
பழங்கள், காய்கறிகளை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை உண்பது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
தூக்கத்திற்கான மெலடோனின் சுரப்பை அதிகப்படுத்தும் சிக்கன், முட்டை, கடல் உணவுகள் என புரதம் அதிகமுள்ள உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
எளிதாக செரிமானம் அடையும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் சிறந்த தூக்கத்தை பெறலாம்.
டிரிப்டோபன், மெலடோனின் இந்த இரண்டும் பாலில் உள்ள மூலக்கூறுகள். இவை உடலை தூக்கத்திற்கு தயார்படுத்துகிறது.
பாதாம், அக்ரூட் பருப்புகள், பிஸ்தா, முந்திரி ஆகியவை தூக்கத்திற்கு உதவும் சிறந்த உணவாகும்.