ஆஸ்துமா என்னும் இரைப்பு நோய்க்கான காரணங்கள்..!

இரைப்பு நோய் (ஆஸ்துமா) என்பது மூச்சு விடுவதற்கு சிரமத்தை தருகின்ற நோய் ஆகும்.
நோய்க்கான காரணங்கள்:- பாரம்பரியம் காரணமாக வரலாம்.
காற்றிலுள்ள தூசிகளின் ஒவ்வாமை காரணமாக வரக்கூடும்.
புகை, பனி, குளிர் காற்று, காற்று மாசுபாடு, வாசனைப் பொருட்கள், போன்றவற்றை காரணமாக வரக்கூடும்.
ஹிஸ்டமின்அசைட்டைல் கோலைன் ரத்தத்தில் அதிகரிக்கும்போது ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
உடலின் நோயெதிர்ப்பு அமைப்பில் உள்ள மாறுபாடுகளால் ரத்தத்தில் "இம்முனோகுளோபுலின் ஈ" அதிகரித்து காணப்படுவதால் ஏற்படலாம்.
தீவிர உடற்பயிற்சி, காரணமாக ஆஸ்துமா வரலாம்.
மிகவும் உயர்ந்த மலைப் பிரயாணங்களை விரும்புவோர் ஆஸ்துமா பிரச்சினையை சந்திக்கநேரிடும்.
நுரையீரலை தீவிரமாக பாதிக்கும் பாக்டீரியா, வைரஸ் நோய்கள் போன்ற பல காரணங்களால் இரைப்பு நோய் (ஆஸ்துமா) வருகிறது.