காது கேளாமைக்கான காரணங்கள் மற்றும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்..!
பிறப்பிலே செவி கட்டமைப்பில் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு காது கேளாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
வயது முதுமை காரணமாகவும் செவித்திறன் இழப்பு அதிகமாக ஏற்படுகிறது.
மெனியர் நோய், இது செவிப்புலன் மற்றும் சமநிலையை பாதிக்கும்.இதுவே காதில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாகும்.
உங்கள் தலையிலோ அல்லது மண்டை ஓட்டிலோ ஏதாவது காயம் ஏற்பட்டால்,அதுவும் காதுகேளாமைக்கு முக்கிய காரணமாகும்.
காதை மூளையுடன் இணைக்கும் கோக்லியர் நரம்பில் ஏதாவது கட்டி ஏற்பட்டால் ஒலி நரம்பு மண்டலம் பாதித்து காதில் குறைபாட்டை உண்டாக்கும்.
காதுகேளாமைக்கு முக்கிய காரணம் உரத்த சத்தங்களை கேட்பது.எனவே அதிக சத்தங்கள் எழுப்பும் இடங்களை தவிர்க்க வேண்டும்.
உரத்த சத்தம் நீண்ட நேரம் காதில் வெளிப்படுவதை உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
காதில் ஏதேனும் தொற்றுநோய் ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது நல்லது.இதய நோய் மற்றும் இரத்த அழுத்தத்தை உங்கள் கட்டுக்குள் வைக்க வேண்டும்.
புகை பிடிப்பது மற்றும் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.இதனால் உங்கள் செவித்திறன் பாதிக்க வாய்ப்புள்ளது.