குதிகால் வெடிப்பு வருவதற்கான காரணங்கள்..!
குளிர்ச்சியான காலநிலையின் போது சருமம் சுருங்க ஆரம்பிப்பதால், வெடிப்புகள் ஏற்படக்கூடும்.
பாதங்களில் வறட்சி ஏற்படுவதன் மூலம் வெடிப்பு உண்டாகிறது.
அளவுக்கு அதிகமான அழுத்தத்தை பாதங்களுக்கு கொடுப்பதன் மூலம் வெடிப்புகள் ஏற்படுகிறது.
நீரில் நீண்ட நேரம் இருப்பதால் சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்கள் வெளியேறி குதிகால் வெடிப்பு ஏற்படுகிறது.
உடலின் அத்தியாவசிய சத்துக்குறைபாடு காரணமாக குதிகால் வெடிப்புகள் ஏற்படக்கூடும்.
காலணி அணியாமல் நடப்பதன் மூலம் காலில் கிருமிகள் நுழைந்து வெடிப்புக்களை ஏற்படுத்துகிறது.