5-வது முறையாக "சாம்பியன்" பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ்...!!!
Twitter : @IPL
அகமதாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த இறுதிப்போட்டி தொடர்மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் திங்கள் கிழமைக்கு மாற்றியமைக்கப்பட்டது.
மழை பொழிய வாய்ப்பு இருந்ததனால் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனால் களம் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சுப்மன் கில் 39 ரன்கள் எடுத்த நிலையில் டோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்கால் வெளியேறினார்.
ஆனால் சென்னை ரசிகர்களின் மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.......தமிழக வீரர் சாய் சுதர்சன் தன் அபார பேட்டிங்கினால் 96 ரன்கள் எடுத்தார்.
Twitter : @IPL
இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஒவர்களில் 4 விக்கெட்டிற்கு 214 ரன்கள் எடுத்தது.
Twitter : @IPL
215 என்பதை இலக்காகக் கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் களம் இறங்கினர்.
Twitter : @IPL
3 பந்துகள் மட்டும் வீசப்பட்ட நிலையில் மழை குறுக்கிட்டதனால் போட்டி நிறுத்தப்பட்டது.
பின்னர் போட்டி 15 ஒவராக மாற்றப்பட்டு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
Twitter : @IPL
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாடியபோதும் கடைசி ஒவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது.
Twitter : @IPL
கடைசி இரு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களத்தில் இருந்த ஜடேஜா ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி விளாசினார்.
Twitter : @IPL
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரில் வெற்றி பெற்று 5வது முறையாக "சாம்பியன்" பட்டம் பெற்றது.
Twitter : @IPL