குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் சாக்லேட் பணியாரம் செய்முறை!
Photo: MetaAI
தேவையான பொருட்கள்: சிவப்பு அவல் - 1/½கப்ம், ரவை -1/4 கப், கோதுமை மாவு -1/4 கப், சர்க்கரை -½கப், கோக்கோ பவுடர் -2 டேபிள்ஸ்பூன், உப்பு -1 சிட்டிகை, ஏலக்காய் - 2, நெய் -தேவையான அளவு, பால் -1/2 கப் (காய்ச்சி ஆறவைத்தது), சோடா உப்பு -1/4 டீஸ்பூன்
Photo: MetaAI
செய்முறை: முதலில் மிக்சியில் சிவப்பு அவல், ரவை, கோதுமை மாவு, சர்க்கரை, கோக்கோ பவுடர், உப்பு, ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்து மிருதுவாக அரைத்துக்கொள்ளவும்.
Photo: MetaAI
பிறகு அதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து, ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யையும், பாலையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும் (கரண்டியில் எடுத்து ஊற்றும் பக்குவத்தில் இருக்க வேண்டும்).
Photo: MetaAI
பின்னர் அந்தக் கலவை மாவை, நேரம் இருந்தால் அரை மணி நேரம் அல்லது 10 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
Photo: MetaAI
அரை மணி நேரம் கழித்து, மாவில் சோடா உப்பையும், மீதமுள்ள பாலையும் சேர்த்து, அக்கலவையை பணியார மாவு பதத்துக்குக் கொண்டு வர வேண்டும்.
Photo: MetaAI
குழிப்பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து, குழிகளில் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் விட்டு, மாவை ஊற்றி மிதமான சூட்டில் திருப்பித் திருப்பி வேகவைக்க வேண்டும்.
Photo: MetaAI
இருபுறமும் பொன்னிறமாக வரும் வரை வேகவைத்து எடுத்தால், சூப்பரான சுவையில் சாக்லேட் பணியாரம் தயாராகிவிடும்.