சமையலறை சுத்தமும்..ஆரோக்கியமான வாழ்வும்..!
சுத்தம் சோறு போடும்’ என்ற பழமொழிக்கு ஏற்றவாறு, சமையலறை சுத்தமாக இருக்க வேண்டும்.
சமையலறையில்தான் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் நம்மை அறியாமலேயே உணவைத் தாக்குகின்றன.
சமையலறையில் அதிக ஈரப்பதம் இருப்பதால் தான் பாக்டீரியா போன்ற நுண் கிருமிகள் வளரக் காரணமாக அமைகிறது.
சமையலறையில் உள்ள சிங்க்கை தினமும் சுத்தம் செய்யவேண்டும். சமையல் செய்த பாத்திரங்களில் இருக்கும் உணவுகள் சிங்கின் பைப்பில் தேங்கி விடாமல் நன்றாக சுத்தம் செய்தல் நல்லது.
சமையலறையில் சேர்த்து வைக்கும் குப்பைகளை உடனுக்குடன் வெளியேற்ற வேண்டும். இல்லையென்றால் கிருமி நாசினிகள் உணவில் கலந்துவிடும்.
சமையலறையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் துணியை வாரத்திற்கு இரண்டு முறை மாற்ற வேண்டும்.