கழிவறை சுத்தமும்..ஆரோக்கியமான வாழ்க்கையும்..!

கழிப்பறை தரையை சுத்தம் செய்ய கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும்.
குப்பைத்தொட்டியை பாத்ரூம் உள்ளே சுத்தம் செய்யாமல் வெளியே சுத்தம் செய்ய வேண்டும்.
குப்பைகள் அழுக்குகள் தரையில் சிந்தாமல் இருக்க ஓரத்தில் ஒரு குப்பைதொட்டியை வைக்கலாம்.
வாரம் ஒருமுறை கிருமி நீக்கம் செய்ய பாத்ரூம் கதவு கைப்பிடிகள், ப்ளஷ், கைப்பிடி போன்றவற்றை சுத்தம் செய்யவும்.
கழிப்பறையை தூரிகையை பயன்படுத்தி சுத்தம் செய்வதன் மூலம் அழுக்குகள் மற்றும் கறைபடிவதை தடுக்கலாம்.
கழிப்பறை தரை உலர்வாக வைக்க சரியான காற்றோட்டமாக இருக்கும்படி உறுதி செய்ய வேண்டும். தேவையெனில் எஸ்ட்டாஸ் பேன் பயன்படுத்தலாம்.
கழிப்பறை பயன்படுத்திய பிறகு மூடிவிடுவது அவசியம். இது பாக்டீரியாக்கள் கழிப்பறையிலிருந்து வெளியேறுவதை தடுக்க உதவும்.
கழிப்பறை பயன்படுத்துவதற்கு முன்பு டாய்லெட் பேப்பரை பயன்படுத்தி கழிப்பறை இருக்கையை சுத்தம் செய்வது அவசியம். இது நோய்த்தொற்றுகளை தடுக்க செய்யும்.
பாத்ரூம் வாளியில் எப்போதும் தண்ணீர் பிடித்து வைக்க வேண்டாம். தண்ணீரும் பாக்டீரியாவை உருவாக்கலாம்.