இரப்பை அழற்சி போன்ற செரிமானம் சார்ந்த நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது.
தேங்காய்ப் பூவில் காணப்படும் ஜெலட்டினஸ் என்னும் பொருள் நீரேற்றம் கொண்டது. எலக்ட்ரோலைட்டுகளின் தேவையை பூர்த்தி செய்யும். இயற்கையாகவே நீரேற்றத்தை தக்க வைக்கும்.
தேங்காய்ப்பூ சாப்பிடுவதால் பிரீ ரேடிக்கல் செல்கள் வெளியேற்றுவதன் மூலம் இளமையை தக்கவைக்கலாம்.மேலும் தேங்காய்ப்பூவில் செலினியம் அதிகமாக இருப்பதால் முகப்பொலிவை பிரகாசமாக்கும்.
தேங்காய்ப் பூவில் வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள், ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
தேங்காய்ப் பூவில் நீர்ச்சத்தைபோலவே நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. அது செரிமான செயல்பாடுகளை அதிகப்படுத்தி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும்
தேங்காய்ப் பூவில் இருக்கும் இயற்கை சர்க்கரை உடலுக்கு விரைவான ஆற்றலை வழங்குகிறது.