இட்லி மாவில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வேக வைத்தால், மாலை வரை இட்லி மென்மையாக இருக்கும்.
இட்லி மாவில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வேக வைத்தால், மாலை வரை இட்லி மென்மையாக இருக்கும்.
அரிசி, பருப்பு போன்றவற்றில் ஒரு பிரிஞ்சி இலை, ஒரு காய்ந்த மிளகாய் போட்டு வைத்தால் பூச்சி, புழு அண்டாது.
உருளைக்கிழங்கை வேக வைக்கும்போது தண்ணீரில் இரண்டு, மூன்று சொட்டு எண்ணெய் ஊற்றவும். பின்பு உப்பு போட்டு வேக வைத்தால் உரிக்க எளிதாக இருக்கும்.
இளஞ்சூடுள்ள பாலில் ஒரு வர மிளகாய் போட்டு வைத்தால் கெட்டி தயிர் கிடைக்கும்.
வாழைப்பழத்தை பேப்பரில் சுற்றிவைத்தால் மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
குக்கர் மூடியின் உட்புறம் எண்ணெய் தடவி பருப்பை வேக வைக்கவும். அப்படி செய்தால் மூடியில் பருப்பு ஒட்டாமல் வேகும்.பாத்திரத்தையும் எளிதாக கழுவி விடலாம்.
சப்பாத்தி, பூரி மாவு அதிகமாக இருந்தால், மீதி மாவின் மீது எண்ணெய் தடவி காற்று புகாத டப்பாவில் அடைத்து பிரிட்ஜில் வைத்தால் இரண்டு நாட்கள் வரை மாவு மென்மையாக இருக்கும்.