மக்காச்சோளமும்..மறைந்திருக்கும் மருத்துவ குணங்களும்..!
இரும்புச்சத்து அதிகம் உள்ள சோளத்தை சாப்பிடுவதால் உடலில் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தி அதிகரித்து, ரத்த சோகை குறைபாடு வராமல் தடுக்கிறது.
சோளத்தில் இருக்கும் ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
இதில் இருக்கும் நார்ச்சத்து குடல் புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
மக்காசோளத்தில் அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளதால், இது மலச்சிக்கல் பிரச்சினையை தடுக்கிறது.
இதில் கார்போ ஹைட்ரேட் மற்றும் புரதம் நிறைந்து காணப்படுகிறது. இது மனஅழுத்தம் ஏற்படாமல் தடுக்கிறது.
சோளம் குறைந்த அளவு கொழுப்பை கொண்டது. இது இதயம் சார்ந்த நோய்களை நம்மை நெருங்காமல் பாதுகாக்கிறது.
மக்காச்சோளத்தில் சரியான அளவில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் நிறைந்துள்ளன. இவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு சோளம் சிறந்த உணவாக திகழ்கிறது. மேலும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கிறது.
மக்காச்சோளத்தில் உள்ள நிறமிச்சத்து, பார்வைத்திறனை மேம்படுத்துகிறது.