வெயிலுக்கு ஏற்ற வெள்ளரிக்காய்..!

வெள்ளரிக்காயில் 96% நீர் சத்து நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள நச்சுகளை நீக்கி நீரேற்றத்தை மேம்படுத்துகிறது.
சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைப்பதில் வெள்ளரிக்காய் சிறந்து விளங்குகிறது.
உடல் எடையை கட்டுக்கோப்பாக வைப்பதற்கு வெள்ளரிக்காய் முக்கிய பங்காற்றுகிறது.
வாய் துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மைக்கொண்டது.
மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் வெள்ளரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இதிலிருந்து விடுபடலாம்.
வெள்ளரிக்காயில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. இது ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
இதில் வைட்டமின் கே அதிக அளவில் நிறைந்துள்ளது. இது எலும்பின் அடர்த்தி அதிகரித்து, எலும்புகளை வலுவடைய செய்யும்.
புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும் தன்மைக் கொண்டது.