நடிகை தீபிகா படுகோனே மன அழுத்தம் பற்றி அடிக்கடி பேசி வருகிறார். இந்த நிலையில் தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டு அதில் இருந்து மீண்ட நாட்களை மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டார்.
Instagram: deepikapadukone
நான் நடிகையானதும் சினிமா வாழ்க்கை நன்றாகவே போனது. ஆனாலும் எனக்குள் இனம் புரியாத வேதனை இருந்தது.
Instagram: deepikapadukone
தற்கொலை சம்பந்தப்பட்ட எண்ணங்கள் கூட வந்தன. என் பெற்றோர் பெங்களூரில் இருந்தார்கள். அடிக்கடி என்னை அவர்கள் பார்ப்பதற்காக மும்பை வருவார்கள்.
Instagram: deepikapadukone
அவர்கள் வரும்பொழுதெல்லாம் நான் அவர்கள் முன்னால் உற்சாகமாக இருப்பது போல நடிப்பேன். எனக்குள் தெரியாத ஒரு சூனியம் ஏற்பட்டது.
Instagram: deepikapadukone
என் அம்மா என்னை உடனே புரிந்து கொண்டு மன அழுத்தத்தில் இருந்து நான் வெளிவருவதற்காக எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொண்டார்.
Instagram: deepikapadukone
அதேபோல உங்கள் குடும்பத்தில், உங்கள் நண்பர்களிடையே உங்களுக்கு நெருக்கமானவர்களிடையே அதுபோன்ற மன அழுத்தத்துக்கு ஆளானவர்கள் இருப்பார்கள். அவர்களை நீங்கள் தான் கண்டுபிடித்து காப்பாற்ற வேண்டும்.