தேவையான பொருட்கள் : அரிசி மாவு , சர்க்கரை, காய்ச்சி ஆற வைத்த கெட்டி பால், கடலை மாவு, கற்கண்டு, நெய், எண்ணெய், பச்சை கற்பூரம், ஏலக்காய், முந்திரி, திராட்சை, பாதாம் ஆகியவை..
முதலில் அடுப்பில் கடாயை வைத்து அதில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து சர்க்கரை பாகு தயார் செய்யவும்.
அடுத்து, கடலை மாவுடன் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு போல் கரைத்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்ற வேண்டும். பின்பு, கடாயின் மேல் சல்லடை வைத்துக் கரைத்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பூந்தி செய்யவேண்டும்.
நன்கு பொன்னிறமாக பூந்தியைப் பொரித்து, உடையாமல் எடுத்துக் கொள்ளவும். பின்பு இதை சர்க்கரை பாகில் உடனே சேர்க்கவும்.
கடாயில் இருக்கும் எண்ணெயில் முந்திரி, கிராம்பு, திராட்சை ஆகியவற்றை போட்டு, பொரித்து எடுத்து பூந்தியுடன் சேர்க்கவும்.
அடுத்து, ஏலக்காய் பொடி, கற்கண்டு, ஜாதிக்காய் பொடி, பச்சை கற்பூரம் ஆகியவற்றை சர்க்கரை பாகு பூந்தியுடன் சேர்த்து 40 நிமிடம் ஊற வைக்கவும்.
இப்போது பூந்தி, சர்க்கரை பாகில் நன்கு ஊறி, மேலே பொங்கி வந்துவிடும்.
இதனுடன் நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு உருண்டை பிடிக்க வேண்டும்.
இப்போது உங்களுக்கு விருப்பமான அளவில் பூந்தியைப் பக்குவமாய் எடுத்து உருண்டைகளாகப் பிடிக்கவும். அவ்வளவு தான் திருப்பதி லட்டு ரெடி.