நீங்கள் அப்பளப் பிரியரா? இது உங்களுக்குத்தான்..!

அப்பளத்தில் அதிகமாக இருக்கும் முக்கிய பொருள் உப்பு. பொதுவாகவே இந்திய உணவுகளில் மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்க்கப்படுகின்றன.

உடலில் இவை இரண்டுமே அளவுக்கு அதிகமாக சேர்வது நல்லதல்ல. முக்கியமாக உப்பின் அளவு உடலில் அளவுக்கு அதிகமாக சேரக் கூடாது.

ரத்தத்தில் அளவுக்கு அதிகமாக உப்பு சேர்வது, ரத்த அழுத்தம், குமட்டல், தாகம், நீரிழிவு போன்றவை அதிகரிக்க காரணமாகும்.

மசாலா மற்றும் உப்பு ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக உடலில் சேர்வதால் அசிடிட்டி மற்றும் செரிமான கோளாறுகள் உண்டாகலாம்.

அளவுக்கு அதிகமாக அப்பளம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படக்கூடும்.

அப்பளம் வயிற்றில் இருந்து குடல் வரையில் செல்லும் வழியில் தாக்கம் உண்டாக்கி, வாயுத்தொல்லை பிரச்சினை உண்டாக காரணியாக இருக்கிறது.

வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் உணவில் அப்பளத்தை சேர்த்து கொள்வதை தவிர்ப்பது நல்லது. இது பிரச்சினையை அதிகரிக்கக்கூடும்.

அப்பளம் அதிக அளவு எண்ணெயைக் குடிக்கும் தன்மை கொண்டது. இது கெட்ட கொழுப்பின் அளவை அதிகரித்து, இதய நோய்க்கு வழிவகுக்கும்.