தீபாவளி : சுழியம் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் : கடலை பருப்பு, வெல்லம், மைதா மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், உப்பு, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல், நெய்
முதலில் கடலைப் பருப்பை நன்றாகக் கழுவி ஊறவைத்து, பின்பு குக்கரில் நன்கு மசியும் வரை வேக வைத்து வடிகட்டவும்.
மிதமான தீயில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதில் வெல்லம் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து பாகு தயார் செய்யவும்.
பாகு கெட்டியானதும்,அதில் தேங்காய் துருவல் மற்றும் நெய் சேர்த்து கிளறி பின்,கடலை பருப்பு சேர்த்து கிளறவும்.
கடலை பருப்பு நன்றாக மசிந்து கெட்டியாக வரும் வரை மிதமான தீயில் வைத்து கிளறவும்.
கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வந்ததும் இறக்கி விடவும். இப்பொழுது,கலவை இன்னும் கெட்டியாக மாறி இருக்கும்.
20 நிமிடம் கழித்து,கெட்டியான கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளலாம்.
மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவு,அரிசி மாவு, உப்பு,மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தை விட சிறிதளவு கெட்டியாக கரைத்துக்கொள்ளவும்.
பின்பு,ஒரு வாணலியில் மிதமான தீ வைத்து, கலவை உருண்டைகளை இந்த மாவு கலவையில் இரண்டு முறை நன்றாக முக்கி எடுத்து, எண்ணெய் காய்ந்ததும் பொரித்து எடுக்கலாம்.
அவ்வளவுதான். வெளியே மொறுமொறுப்பும், உள்ளே சாப்ட்டும் கூடிய சுவையான சுழியம் ரெடி.