தீபாவளி ஸ்பெஷல்: சுவையான தட்டை செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் : உளுத்தம் பருப்பு, பொரிகடலை, பெருங்காயத்தூள், அரிசி மாவு, சீரகம், எள், கறிவேப்பிலை, உப்பு, மிளகாய் தூள், கடலை பருப்பு, எண்ணெய்
ஒரு கடாயில் உளுத்தம் பருப்பை போட்டு நிறம் மாறும் வரை வறுக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் கடலை பருப்பை நன்கு ஊற வைக்கவும்.
வறுத்த உளுந்தம் பருப்புடன் பொரிகடலை சேர்த்து நன்கு அரைக்கவும்.
அரைத்த கலவையுடன் அரிசி மாவு, உப்பு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள், நறுக்கிய கறிவேப்பிலை, எள், ஊறவைத்த கடலை பருப்பு சேர்த்து கலந்து தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசையவும்.
ஒரு வாணலியில் பொரிக்க தேவையான எண்ணெய் சேர்த்து சூடுபடுத்த வேண்டும்.
மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வட்டமாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
மிதமான தீயில் வைத்து தட்டையை பொரித்தால் கருகாமல் பொன்னிறமாக வரும்.
இப்போது சுவையான தட்டை தயார்.