குளிர் காலத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கு தோல் பிரச்சினை ஏற்படுகிறதா?
தோல் வறட்சி குறிப்பாக வயதானவர்கள் மற்றும் பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது.
பெரும்பாலும் பெரிபெரல் வாஸ்குலர் நோய் உள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த நாளங்களில் உண்டாகும் மாற்றங்கள், சரும கொலோஜெனை சேதமடைய செய்து தொற்றுக்கள் ஏற்பட வழிவகுக்கிறது.
மேலும் ஆட்டோனாமிக் (தன்னியக்க) நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு வியர்வை சுரப்பது தடைப்பட்டு தோல் வறட்சியை ஏற்படுத்துகிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு வறண்ட சருமம் ஏற்பட முக்கிய காரணங்கள்: கட்டுப்பாடற்ற அதிக ரத்த சர்க்கரை அளவு.
குளிர்காலங்களில் காணப்படும் வறண்ட காற்று மற்றும் குறைந்த ஈரப்பதம் காரணமாக வறண்ட சருமம் ஏற்படலாம்.
புகை, மதுப்பழக்கம் மற்றும் மன அழுத்தம் காரணமாக உண்டாகலாம்.
ஹைப்போ தைராய்டிசம் பிரச்சினையினால் ஏற்படக்கூடும்.
ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக வரலாம்.
ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக வரக்கூடும்.