சதுப்பு நிலத்தில் வாழும் பூனை இனம் பற்றி தெரியுமா?
மீன்பிடிப் பூனை தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது. இவை கருப்பு நிற கோடுகள் மற்றும் புள்ளிகளுடன் கூடிய மஞ்சள் மற்றும் சாம்பல் நிற ரோமங்களைக் கொண்டுள்ளது.
வீட்டுப் பூனையை விட இரண்டு மடங்கு பெரியதாக இருக்கும். இவற்றின் உடல் 57 முதல் 78 செ.மீ. நீளமும், வால் 20 முதல் 30 செ.மீ. நீளமும், 5 முதல் 16 கிலோ எடை வரையிலும் காணப்படும்.
இந்த பூனை நீருக்கடியில் மிக வேகமாக நீந்தும் திறன் கொண்டது. மேற்கு வங்காளத்தின் மாநில விலங்காக இது திகழ்கிறது.
இந்தியாவில் அசாம், மேற்கு வங்காளம், ஒடிசா, கேரளா ஆகிய இடங்களில் இதைக் காணலாம்.
மீன், நண்டு, பூச்சி, சிறிய கொறித்துண்ணிகள் இதன் விருப்பமான உணவு. இது ஆழமற்ற நீரில் வேட்டையாடுவதையே விரும்புகிறது.