சூரியனின் புறஊதாக் கதிர்வீச்சு ஏற்படுத்தும் மோசமான பாதிப்புகளில் இருந்து பூமியில் வாழும் உயிரினங்களைப் பாதுகாப்பது தான் ஓசோன் படலம்
சூரிய ஒளி இல்லாமல் பூமியில் வாழ சாத்தியமில்லை. ஆனால் ஓசோன் படலம் இல்லாவிட்டால் சூரியனில் இருந்து வெளிப்படும் ஆற்றல் மிக அதிகமாக இருக்கும்.
புற ஊதாக்கதிர்கள் நேரடியாக பூமியில் விழுந்தால், அது மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
உலக அளவில் பெருகிவரும் தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையால் காற்று மாசுபடுகிறது.
ஓசோன் படலத்தின் சிதைவுக்கு நாம் பயன்படுத்தும் ரசாயனங்கள் மற்றும் குளிரூட்டும் சாதனங்கள் தான் காரணம் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.
குளோரோபுளோரோகார்பன் மற்றும் புரோமின், கார்பன், குளோரின், கார்பன் டெட்ரா குளோரைடு போன்ற வேதி பொருட்கள் ஓசோன் படலத்தின் அடர்த்தியை வெகுவாகக் குறைத்து, துளையை ஏற்படுத்துகிறது.
1970-ம் ஆண்டு கால கட்டத்தில் விஞ்ஞானிகள் மனிதகுலம் இந்த பாதுகாப்பு கவசத்தில் ஒரு துளையை உருவாக்குவதைக் கண்டறிந்தனர்.
செப்டம்பர் 1987-இல், ஓசோன் அடுக்குகளை குறைக்கும் பொருட்களின் மீதான மாண்ட்ரீல் நெறிமுறையை உருவாக்க இது வழிவகுத்தது.
இந்த மாண்ட்ரீல் நெறிமுறையின் முக்கிய நோக்கம், ஓசோன் படலத்தை பாதிக்கும் வகையிலான பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாடுகளை படிப்படியாக அகற்றுவதாகும்.