ஒட்டகம், நீர் அருந்தாமல் எவ்வளவு நாள் இருக்கும் தெரியுமா..?
ஒட்டகத்தின் முதுகுப்பகுதியில் திமில் போன்ற மேடான பகுதி உள்ளது. இந்தப் பகுதியில்தான் கொழுப்பு உணவுப்பொருட்கள் சேமித்து வைக்கப்படுகின்றன.
ஒட்டகத்தின் இரைப்பையில் 3 அறைகள் உள்ளன. முதல் இரு அறைகளின் சுவர்களில் தனித்தன்மை வாய்ந்த பிளாஸ்டிக் வடிவ செல்கள் உள்ளன.
இதற்கு ‘நீர் செல்கள்’ என்று பெயர். இதில்தான் நீர் சேமித்து வைக்கப்படுகிறது. இதோடு, தசைகளிலும் இணைப்புத்திசுக்களிலும் நீரை சேமித்து வைக்கும் தகவமைப்பு உள்ளது.
திமிலில் உள்ள சேமிப்பு உணவுப்பொருட்களின் வளர்சிதை மாற்றத்தின் மூலம் கிடைக்கும் நீரே, ஒட்டகத்துக்கு சில வேளைகளில் போதுமானது.
இதனால் 2 வாரங்கள் வரை நீர் அருந்தாமல் ஒட்டகத்தால் தாக்குப்பிடிக்க முடியும்.
நீரே இல்லாத, அமிலத்தன்மையுடைய சிறுநீரை வெளியேற்றுவதன் மூலமே, ஒட்டகம் உடலில் நீரை தக்க வைத்துக்கொள்கிறது. இதனால்தான் ஒட்டகத்தை ‘பாலைவனக் கப்பல்’ என்கிறோம்!