செல்பி எடுப்பதில் ஆபத்தான நாடுகள்.. இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா?
metaAI
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள தி பார்பர் சட்ட நிறுவனம், கடந்த 2014 முதல் 2025 மே மாதம் வரை செல்பி எடுக்கும் போது ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் மற்றும் காயங்களை கண்காணித்து ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வு, செல்பி எடுக்க நேரடியாக முயற்சித்து மரணத்தை விளைவிக்கும் நிகழ்வுகள் குறித்து செய்திகள் மற்றும் கட்டுரைகளை அடிப்படையாக பயன்படுத்தி நடத்தப்பட்டது. ஆபத்தான நாடுகள் பட்டியல்:
7) கென்யா, பிரிட்டன், ஸ்பெயின் மற்றும் பிரேசில் (தலா 13 உயிரிழப்புகள்)
6) இந்தோனேசியா (14 உயிரிழப்புகள்)
5) ஆஸ்திரேலியா -(14 உயிரிழப்புகள்)
4) பாகிஸ்தான்- (16 உயிரிழப்புகள்)
3) ரஷ்யா- 19 (18 உயிரிழப்புகள் மற்றும் ஒரு காயம்)
2) அமெரிக்கா- 45 நிகழ்வுகள் (37 உயிரிழப்புகள், 8 காயங்கள்)
1) இந்தியா-271 நிகழ்வுகள் (214 உயிரிழப்புகள், 57 காயங்கள்)
செல்பி தொடர்பான அனைத்து இறப்புகளிலும் பெரும்பாலும் 46 சதவீதம் கூரைகள், பாறைகள் அல்லது உயரமான கட்டமைப்புகளில் இருந்து விழுவதே காரணமாக இருப்பதாக கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.