கண்களை சுற்றி கருவளையம் உண்டாக காரணம் தெரியுமா?

கண்களைச் சுற்றி கருவளையங்கள் யாருக்கு வேண்டுமானாலும், எந்த வயதில் வேண்டுமானாலும் ஏற்படலாம்.
காரணங்கள் : இருள் சூழ்ந்த தன்மையினால் வரக்கூடும்.
வயது முதிர்வு காரணமாக ஏற்படலாம்.
போதுமான தூக்கமின்மையினால் வரலாம்.
சருமத்தில் அதிக அளவு மெலனின் இருப்பதனால் ஏற்படக்கூடும்.
அதிக அளவில் சிகரெட் புகைப்பதால் ஏற்படலாம்.
அதிக அளவில் மது அருந்துதல் காரணமாக வரக்கூடும்.
அதிக மன உளைச்சலுக்கு ஆளானவர்களுக்கு ஏற்படக்கூடும்.
சில நேரங்களில் நோயின் காரணமாக கண்கள் வீங்கிப் போயிருந்தால், கறுப்பாகத் தெரியக்கூடும்.