கடலில் கட்டப்பட்டுள்ள மிக நீளமான பாலம் எங்கு உள்ளது தெரியுமா?
உலகிலேயே கடலில் கட்டப்பட்டுள்ள மிக நீளமான பாலம் சீனாவில் உள்ளது.
சீனாவின் பிரதான நிலப்பகுதியையும் ஹாங்காங்கையும் இணைக்கும் வகையில் 55 கி.மீ. நீளத்துக்கு கட்டப்பட்டுள்ள இந்த பாலம் ‘ஹாங்காங்-ஸுகாய்-மக்காவோ' என அழைக்கப்படுகிறது.
20 பில்லியன் செலவில் 4 லட்சம் டன் இரும்பை கொண்டு கட்டப்பட்டுள்ளது.
இந்த பாலம் புயல், பூகம்பம் ஆகியவற்றை தாங்கும் வகையில் மிகவும் உறுதியாக கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் கீழ் பெரிய கப்பல்கள் சென்றுவர முடியும்.
கடலில் செயற்கையாக உருவாக்கப்பட்ட நீல டால்பின், வெள்ளை டால்பின் என்ற இரு தீவுகள் வழியாக இந்த பாலம் செல்கிறது.
இந்த தீவுகளுக்கு இடையேயான 6.7 கி.மீ. நீளத்துக்கு கடலுக்கு அடியில் பாலம் கட்டப்பட்டு இருக்கிறது.
2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய இதன் கட்டுமான பணிகள் 9 ஆண்டுகள் நடைபெற்றது.
இந்த பாலம் 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் போக்குவரத்துக்கு திறந்து வைக்கப்பட்டது.