டான்யாங்-குன்ஷன் கிராண்ட் பாலம் கிட்டத்தட்ட 164.8 கிலோமீட்டர்கள் (102.4 மைல்கள்) தூரம். உலகின் மிக நீளமான பாலம் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளது.
பெய்ஜிங்-ஷாங்காய் அதிவேக ரெயில் பாதையின் முக்கிய பகுதியாக கட்டப்பட்ட இந்த பாலம், ஜியாங்சு மாகாணத்தில் டான்யாங் மற்றும் குன்ஷான் இடையே அமைந்துள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகளின் குறுக்கே நீண்டுள்ளது. சீனாவின் விரிவான அதிவேக ரெயில் பயணத்திற்கு இது ஒரு முக்கியமான இணைப்பாகும்.
இந்த பாலத்தின் கட்டுமானம் 2006 இல் தொடங்கி 2010 இல் முடிவடைந்தது.
பாலத்தின் அகலம் சுமார் 80 மீட்டர் ஆகும், மேலும் அதன் கட்டுமானத்தில் சுமார் 450,000 டன் இரும்பு பயன்படுத்தி உள்ளனர்.
இந்த பாலம் 300,000 டன் எடை கொண்ட கடற்படைக் கப்பலில் மோதலைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பாலம் இரண்டு முக்கிய நகரங்களுக்கு இடையே பயண நேரத்தை கணிசமாகக் குறைத்துள்ளது
டான்யாங்-குன்ஷான் கிராண்ட் பாலம் மனிதனின் புத்தி கூர்மை மற்றும் புதுமைக்கு ஒரு சான்றாகும். அதன் வடிவமைப்பு சமகால பொறியியலின் திறமையே வெளிப்படுத்தும்.
இது சீனாவின் குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு மேம்பாட்டு திறன்களைக் காட்டுகிறது.