அட்வென்ச்சர் விரும்பியா நீங்கள்? தமிழகத்தின் சில சாகச மலைப் பாதைகள் உங்களுக்காக...!
கொழுக்குமலை: தமிழ்நாடு கேரள எல்லையில் அமைந்துள்ள இயற்கை சூழ்ந்த இம்மலை சுமார் 1.5 கிமீ நீள பாதை கொண்டது.இதன் எளிய பாதை அமைப்பு புதிதாக மலையேறுபவர்களுக்கு சிறந்தது.
பர்வதமலை: திருவண்ணாமலை, தென்மாதிமங்கலம் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது. 4500 அடிக்கு மேல் உயரமுள்ள மலையானது சஞ்சீவனி மலையின் ஒரு பகுதி என்று நம்பப்படுகிறது.
கூக்கால் நீர்வீழ்ச்சி: கொடைக்கானலில் இருந்து 35 கிமீ தொலைவில் கூக்கால் என்ற அழகிய கிராமத்தில் உள்ளது. 6 கிமீ தூரம் கொண்ட இந்த மலையேற்றம் கூக்கால் நீர்வீழ்ச்சியின் அழகை ரசிக்கும் வகையில் உள்ளது
அத்திரி மலை: மேற்கு தொடர்ச்சி மலையின் பொதிகை மலைத்தொடரில், ஆழ்வார்குறிச்சி என்ற அழகிய கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ளது.இதன் எளிய பாதை அமைப்பு புதிதாக மலையேறுபவர்களுக்கு சிறந்தது.
சதுரகிரி மலை: விருதுநகரில் இருந்து 45 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தாணிப்பாறை கிராமத்தில் அமைந்துள்ள இயற்கை சூழ்ந்த மலைப்பகுதியாகும்.இந்த மலை ஏறுவதற்கு 2 -3 மணி நேரம் ஆகலாம்.
பாணாசுர மலை: கேரள எல்லையில் அமைந்துள்ள இயற்கை சூழ்ந்த மலையாகும்.கோடை மாதங்களில் இது மிகவும் ஈரப்பதமாகவும், மழைக்காலத்தில் மிகவும் வழுக்கும் தன்மையுடனும் காணப்படும்.இதன் எளிய பாதை அமைப்பு புதிதாக மலையேறுபவர்களுக்கு சிறந்தது.
நீலகிரி மலை: வடமேற்கு தமிழ்நாடு, தெற்கு கர்நாடகா மற்றும் இந்தியாவின் கிழக்கு கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ளது. 7,000 அடி உயரம் கொண்ட மலைப்பிரதேசம் ஆகும்.இது இயற்கை சூழ்ந்த மலைப்பகுதியாகும்.