அடிக்கடி ஐஸ் தண்ணீர் குடிக்கிறீர்களா? இந்த பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்..!
குளிர்ச்சியான நீரைப் பருகும் போது இரத்த நாளங்கள் சுருங்கும். இதன் காரணமாக செரிமான செயல்பாடு தாமதமாக்கப்படுவதோடு, உணவுகளும் முறையாக செரிமானமாகாமல் இருக்க வழிவகுக்கும்.
உணவுகளில் உள்ள சத்துக்களை உறிஞ்ச முடியாமல், நாளடைவில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட காரணமாகும்.
சுவாசப் பாதையை பாதுகாக்கும் படலமான சீதச்சவ்வு பாதிப்பிற்குள்ளாகும். அதனால் எளிதில் நோய்த்தொற்றுக்கள் ஏற்பட்டு தொண்டையில் புண் உருவாக வாய்ப்புள்ளது.
உடலினுள் உள்ள திசுக்களும், இரத்த நாளங்களும் அழுத்தத்திற்கு உள்ளாகி, பல பிரச்சனைகளை உண்டாக்கும் தன்மைக்கொண்டது.
மண்டையோட்டின் 10வது நரம்பான சஞ்சாரி நரம்பு தூண்டப்படுவதால் இதயத்துடிப்பு குறைய வாய்ப்புள்ளது.