சருமத்தை பாதுகாப்பதில் கொய்யாப்பழம் முக்கிய பங்காற்றுகிறதா?
கொய்யாப்பழத்தில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் தன்மை கொண்டவை.
கொய்யாப்பழத்தில் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் பாலி சாக்கரைடுகள் உள்ளன. அவை ரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது.
கொய்யாப்பழத்தில் இருக்கும் வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், ஜலதோஷத்தை குறைக்கவும் உதவும்.
கொய்யாப்பழம் உடலில் பாக்டீரியாவை எதிர்த்து போராடி செல்கள் சேதம் அடைவதை தடுக்கும்.
இவை கருப்பையின் மென்மையான தசைகளில் ஏற்படும் பிடிப்பு, வலியை போக்கும் தன்மை கொண்டவை.
பெண்கள் மாதவிடாய் சமயங்களில் கொய்யா இலை சாறு பருகுவது நல்லது.
கொய்யாப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அது செரிமானம் சிக்கலின்றி சீராக நடைபெறுவதற்கு உதவும்.
குடலில் எரிச்சல் போன்ற செரிமான பிரச்சினை கொண்டவர்கள் தினமும் கொய்யாப்பழம் சாப்பிடுவது நன்மை பயக்கும்.
சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கவும், சரும சுருக்கங்களை குறைக்கவும், உதவும் கரோட்டின், லைகோபீன், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவை கொய்யாவில் நிரம்பி உள்ளன.