ஏ.சி.யால் `மின் கட்டணம்' அதிகமாகிறதா...? இப்படி ட்ரை பண்ணுங்க!
ஏ.சி.யை மிகவும் குறைவான வெப்பநிலையில் இயங்கும்போது அதிக மின்சாரத்தைச் செலவழிக்கும். எனவே ஏ.சி.யை 20 டிகிரிக்கு மேல் வைப்பதே நல்லது.
ஏ.சி.யை சர்வீஸ் செய்து பயன்படுத்தும்போது அது நன்றாக வேலை செய்யும். இதன் மூலமும் கரண்ட் பில்லை குறைக்க முடியும்.
தொடர்ந்து ஏ.சி. ஓடிக்கொண்டிருப்பதை தவிர்ப்பதன் மூலம் மின் செலவை குறைக்கலாம்.
கதவு, ஜன்னல்களை கவனமாக மூடிவைப்பதன் மூலம் மின்சார கட்டணத்தை மிச்சப்படுத்த முடியும்.
ஏ.சி.யின் பில்டரை 15 நாட்களுக்கு ஒருமுறை கட்டாயம் சுத்தம் செய்வதன் மூலம் கரண்ட் பில்லை குறைக்கலாம்.