நடைப்பயிற்சி செய்வது இதயத்தை பலப்படுத்துமா?​
நடைப்பயிற்சியும் ஏரோபிக் உடற்பயிற்சியில் ஒரு வகையாகும். இது அனைவராலும் செய்யக்கூடிய ஒரு எளிய உடற்பயிற்சி ஆகும்.
நடைப்பயிற்சி நமது உடல் சார்ந்த செயல்பாடுகளை அதிகரித்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நடைபயிற்சி செய்யும் போது இதயத்துடிப்பு அதிகரித்து, ரத்த ஓட்டம் விரைவாக செயல்பட உதவுகிறது.
இதனால் நமது உடலில் உள்ள உறுப்புகளுக்கு அதிக ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை இதிலிருந்து பெற முடிகிறது.
நம்முடைய இதயம் ஆரோக்கியமாக செயல்படுவதற்கு குறைந்தது 30 நிமிடங்கள் தினசரி நடை பயிற்சி மேற்கொள்வது சிறந்தது.