மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க..ஆண்களின் ஆண்மை குறைவிற்கான அறிகுறிகள்.!

டெஸ்டோஸ்டிரோன் என்பது ஆண்களில் முதன்மையாக விரைகளாலும், பெண்களில் கருப்பைகளாலும் சிறிய அளவில் உற்பத்தி செய்யப்படும் ஒரு பாலின ஹார்மோன் ஆகும்.
டெஸ்டோஸ்டிரோன் உடலில் குறைய ஆரம்பித்தால், பாலுணர்ச்சியானது குறைய ஆரம்பிக்கும். எனவே உங்களுக்கு பாலுணர்ச்சி குறைய ஆரம்பித்தால், அதற்கு காரணம் டெஸ்டோஸ்டிரோன் உடலில் குறைவாக உள்ளது என்று அர்த்தம்.
டெஸ்டோஸ்டிரோன் விந்தணுக்களில் முதன்மையாக உற்பத்தி செய்யப்படுகிறது, மேலும் இது ஆண்மைக்குரிய அம்சங்களின் வளர்ச்சிக்கு முக்கியமானது.
டெஸ்டோஸ்டிரோன் அறிகுறி இருந்தால் இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாது. இப்படி இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெறாவிட்டால், உடலானது பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கக்கூடும்.
மற்ற நேரங்களுடன் ஒப்பிடுகையில், விந்து வெளிப்படுதல் குறைவாக இருந்தால், அதுவும் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக உள்ளது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று. இதனை போதிய சிகிச்சைகளுடன் குணப்படுத்தலாம்.
முன்பை விட உறவில் ஈடுபடும் போது, விறைப்புத்தன்மையானது குறைவாக இருந்தால், அதுவும் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக உள்ளது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.
ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் குறைவாக இருந்தால், அவர்களின் விதைப்பையின் அளவானது சுருங்க ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சிலருக்கு விதைப்பையை தொட்டால் எந்தவித உணர்ச்சியும் இருக்காது.
Explore