காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய பானங்கள்..!
இளநீர் : இது லாரிக் அமிலத்தின் மூலமாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஆரோக்கியமான எடை இழப்புக்கும் உதவுகிறது.
எலுமிச்சை தண்ணீர் : இதில் வைட்டமின் சி அதிக அளவு நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
கிரீன் டீ : இதில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது வளர்சிதை மாற்றத்திற்கு மற்றும் கெட்ட கொழுப்பை எரிக்க உதவுகிறது.
கற்றாழை ஜூஸ் :இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், இரைப்பை குடல் அழற்சியைக் குறைக்க உதவுகின்றன.
இஞ்சி டீ : காலையில் இஞ்சி டீ பருகினால் வயிற்றில் ஏற்படும் அசவுகரியம், குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றைக் குறைக்கலாம்.