நரம்புகள் பலம் பெற..தினமும் பேரிக்காய் சாப்பிடுங்க..!
பேரிக்காயில் கால்சியம், பாஸ்பரஸ் கணிசமாக உள்ளதால் எலும்பு வளர்ச்சிக்கு சிறந்து விளங்குகிறது.
பேரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்திலுள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
இதில் பெக்டின் நார்ச்சத்து உள்ளதால் குடல் புற்றுநோய் திசுக்களை வளராது காக்கும் ஆற்றலும் கொண்டது.
இதில் நுண்ணூட்ட சத்துகளும், வைட்டமின்களும் தாராளமாக இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
கோடை காலத்தில் உடல் உஷ்ணத்தைக் குறைத்து, குளிர்ச்சியை ஏற்படுத்தும்.
நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் பேரிக்காயை அடிக்கடி உண்டு வர, நரம்புகள் பலம் பெறும்.