சருமத்தை மேம்படுத்த தினமும் வால்நட் சாப்பிடுங்க..ஆரோக்கியமான வாழ்க்கை வாழுங்க.!!
வால்நட் அதிக அளவு ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளது. இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
வால்நட்ஸ் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களின் சிறந்த மூலமாகும். இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது.
வால்நட் பருப்பில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இது புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் தன்மைக்கொண்டது.
வால்நட்ஸ் நார்ச்சத்து நிறைந்த மூலமாகும். இது செரிமானத்திற்கும், எடையைக் குறைப்பதற்கும் மிகவும் உதவியாக இருக்கிறது.
இதில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் உள்ளன. இது வயிற்று ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.
வால்நட் பருப்பில் உள்ள வைட்டமின் ஈ சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், தோல் தளர்வு போன்ற வயதான பிரச்சினைகளைத் தடுக்க உதவுகிறது.