நடிகை ரகுல் பிரீத் சிங்குக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்...!
Instagram: rakulpreet
பெங்களூருவில் கோவிந்தபுரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனியார் விடுதியில் மதுவிருந்து நடைபெற்றதாக கூறப்படுகிறது.
Instagram: rakulpreet
இந்த விருந்தில் தெலங்கானாவை சேர்ந்த எம்.எல்.எ. ஒருவரும், நடிகை ரகுல் பிரித்சிங், நடிகர் சங்கர் கவுடா, தனிஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Instagram: rakulpreet
இதுதொடர்பான தகவலின் பேரில் கோவிந்தபுரம் போலீசார் விருந்து நடைபெற்ற இடத்திற்கு சென்று அங்கு போதைப்பொருட்கள் பயன்படுத்திய சங்கர் கவுடாவை கைது செய்தனர்.
Instagram: rakulpreet
போலீசார் நடத்திய விசாரணையில் மதுவிருந்திற்காக ரூ.4 கோடி செலவு செய்யப்பட்டது தெரியவந்தது.
Instagram: rakulpreet
இதையடுத்து தெலங்கானா எம்.எல்.ஏ. மற்றும் நடிகை ரகுல் பிரித்சிங் ஆகியோர் மீது அமலாக்கத்துறை சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Instagram: rakulpreet
இந்த நிலையில் அவர்கள் 2 பேருக்கும் அமலாக்கத்துறை சார்பில் நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.
Instagram: rakulpreet
இதையடுத்து அவர்கள் விரைவில் ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆவார்கள் என கூறப்படுகிறது.
Instagram: rakulpreet